பெர்னில் பரபரப்பு: 15 நிமிடங்களில் முழுவதும் தீயில் மூழ்கிய பண்ணை வீடு!
பெர்னில் பரபரப்பு: 15 நிமிடங்களில் முழுவதும் தீயில் மூழ்கிய பண்ணை வீடு!

பெர்னில் பரபரப்பு: 15 நிமிடங்களில் முழுவதும் தீயில் மூழ்கிய பண்ணை வீடு!
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள ரூபோல்ட்ஸ்ரீட் Ruppoldsriedநகராட்சியில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் தகவல்களின்படி, அப்பகுதியில் அமைந்திருந்த ஒரு பண்ணை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுவதாவது, ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய தீ மிக வேகமாக பரவி, வெறும் 15 நிமிடங்களுக்குள் கட்டிடத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்ததாக தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளிலும், தீ மளமளவென பரவி பண்ணை முழுவதும் புகை மற்றும் தீயால் சூழப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புப் படையினர், தீ மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீப்பிடித்த சொத்து சின்சி பண்ணை என உள்ளூர் தகவல்கள் கூறினாலும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த சம்பவத்தை பெர்ன் மாகாண காவல்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்ன, கட்டிட சேதத்தின் அளவு எவ்வளவு, உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூபோல்ட்ஸ்ரீட் பகுதியில் நடந்த இந்த தீ விபத்து, சில நிமிடங்களில் பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடிய தீயின் ஆபத்தை மீண்டும் நினைவூட்டிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.




