Local Swiss News

வான்க்டோர்ஃப்–ஓஸ்டர்முண்டிகன்Wankdorf und Ostermundigen ரயில் பாதையில் பெரிய மாற்றம் – பயணிகளுக்கு என்ன பலன்?

வான்க்டோர்ஃப்–ஓஸ்டர்முண்டிகன்Wankdorf und Ostermundigen ரயில் பாதையில் பெரிய மாற்றம் – பயணிகளுக்கு என்ன பலன்?

வான்க்டோர்ஃப்–ஓஸ்டர்முண்டிகன்Wankdorf und Ostermundigen ரயில் பாதையில் பெரிய மாற்றம் – பயணிகளுக்கு என்ன பலன்?

சுவிட்சர்லாந்தின் ரயில் போக்குவரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள முக்கிய கட்டுமானத் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

வான்க்டோர்ஃப் மற்றும் ஓஸ்டர்முண்டிகன் இடையேயான ரயில் பாதை விரிவாக்கப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே அறிவித்துள்ளது.

சுமார் 800 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்பிலான இந்த மெகா திட்டம், நாட்டின் ரயில் இணைப்புகளை மேம்படுத்துவதோடு, எதிர்காலப் போக்குவரத்து தேவைகளுக்கும் தயாராகும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக 440 மீட்டர் நீளமுள்ள புதிய வான்க்டோர்ஃப் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இது சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் சீராகவும் வேகமாகவும் இயங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, தண்டவாள அமைப்புகள் விரிவுபடுத்தப்படுவதுடன், ஓஸ்டர்முண்டிகன் ரயில் நிலையமும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் முழுமையாக மேம்படுத்தப்பட உள்ளது.

a01 7

இந்த திட்டத்திற்கான நிதி பெரும்பாலும் கூட்டாட்சி அரசாங்கத்தின் “STEP 2025” விரிவாக்கத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே ஓஸ்டர்முண்டிகன் நிலைய மேம்பாட்டு பணிகள் முன்னேறி வரும் நிலையில், முழு திட்டமும் குறைந்தபட்சம் 2038 ஆம் ஆண்டு வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் நிறைவடைந்த பிறகு, சுவிட்சர்லாந்தின் ரயில் சேவையில் அதிக நிலைத்தன்மை, மேம்பட்ட இணைப்புகள் மற்றும் வசதியான பயண அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button