“இராணுவ வயதுடைய உக்ரேனியர்களுக்கு S பாதுகாப்பு கிடைக்காதா? – சுவிஸில் பரபரப்பு!”
"இராணுவ வயதுடைய உக்ரேனியர்களுக்கு S பாதுகாப்பு கிடைக்காதா? – சுவிஸில் பரபரப்பு!"

“இராணுவ வயதுடைய உக்ரேனியர்களுக்கு S பாதுகாப்பு கிடைக்காதா? – சுவிஸில் பரபரப்பு!”
சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களை பாதிக்கக்கூடிய முக்கிய முடிவு ஒன்றை கூட்டாட்சி மன்றம் தற்போது பரிசீலித்து வருகிறது.
ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், சுவிட்சர்லாந்து முதன்முறையாக ‘S’ பாதுகாப்பு அந்தஸ்தை அமல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம், வழக்கமான புகலிட நடைமுறையின்றி உக்ரேனிய அகதிகளுக்கு தற்காலிக பாதுகாப்பு, வேலை செய்யும் உரிமை, தங்குமிடம், குடும்ப ஒன்றிணைப்பு மற்றும் சமூக உதவி உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது சுவிட்சர்லாந்தில் சுமார் 72 ஆயிரம் உக்ரேனியர்கள் இந்த பாதுகாப்பு அந்தஸ்தின் கீழ் உள்ளனர். அவர்களில் ஏறத்தாழ பாதி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதுடன், பலர் சுவிஸ் சமூகத்துடன் நன்கு ஒருங்கிணைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இராணுவ வயதுடைய உக்ரேனிய ஆண்களுக்கு S பாதுகாப்பு அந்தஸ்தை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டாட்சி மன்றம் ஆலோசித்து வருகிறது. இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டாலும், அது புதிதாக சுவிட்சர்லாந்துக்கு வருபவர்களை மட்டுமே பாதிக்கும் என்றும், ஏற்கனவே S அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு உடனடி மாற்றம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் மூன்று சாத்தியமான நிலைமைகளுக்காக அரசு தயாராகி வருகிறது. அதாவது, S பாதுகாப்பு தொடர்வது, போர் நிறுத்தம் ஏற்பட்டால் அதை முழுமையாக நிறுத்துவது அல்லது போர் நீடித்தாலும் S அந்தஸ்திலிருந்து வெளியேறும் மாற்று திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஆகியவை பரிசீலனையில் உள்ளன.
கலந்தாலோசனைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளைத் தொடர்ந்து, இந்த முக்கிய விடயத்தில் கூட்டாட்சி மன்றம் கோடைக்கால இறுதியில் இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






