“வலதுசாரி தீவிரவாதிகள் பின்னணியா? – 10 மில்லியன் வாக்கெடுப்பில் அதிர்ச்சி சந்தேகம்!”
"வலதுசாரி தீவிரவாதிகள் பின்னணியா? – 10 மில்லியன் வாக்கெடுப்பில் அதிர்ச்சி சந்தேகம்!"

“வலதுசாரி தீவிரவாதிகள் பின்னணியா? – 10 மில்லியன் வாக்கெடுப்பில் அதிர்ச்சி சந்தேகம்!”
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ’10 மில்லியன் மக்கள்’ வாக்கெடுப்பைச் சுற்றி, சமூக ஊடகங்களில் நடந்த டிஜிட்டல் தாக்குதல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முன்மொழிவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த பசுமைக் கட்சி அரசியல்வாதி சாமுவேல் ஸ்பிண்டன் வெளியிட்ட காணொளி, சுமார் 6 இலட்சம் பேரை சென்றடைந்தது. ஆனால் அதன்பிறகு, ஆயிரக்கணக்கான ஒரே மாதிரியான கருத்துகள் அவரது பதிவை நிரப்பின. ஒரே வாசகங்கள், ஒரே படங்கள், ஒரே கோஷங்கள் தொடர்ந்து பதிவானதால், அவை மனிதர்களால் அல்ல, பாட்களால் உருவாக்கப்பட்டவை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணைகளின்படி, இந்த டிஜிட்டல் பிரச்சாரத்தின் பின்னணியில் வலதுசாரி தீவிரவாதக் குழுக்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் அதிகாரிகளிடம் உள்ளது. இருப்பினும், வெளிநாட்டு அரசுகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாட்களின் நோக்கம், சமூக ஊடகங்களில் ஒரு போலியான பெரும்பான்மை கருத்தை உருவாக்கி, முடிவு எடுக்காத வாக்காளர்களின் மனநிலையை மாற்றுவதாகக் கூறப்படுகிறது. இதனுடன் டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் போலி செய்தி வடிவங்களும் பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல் சமூக ஜனநாயக அரசியல்வாதி மார்க் ஹோராட், ஒரு கற்பனை பிரச்சாரப் பதிவை வெளியிட்டு சோதனை செய்தபோது, வெறும் 20 மணி நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தானியங்கி கருத்துகள் வந்தது அவரையே அதிர்ச்சியடைய வைத்தது.
இந்தச் சம்பவம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பாட்கள் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பிரச்சாரங்கள், ஜனநாயக வாக்கெடுப்புகளையே எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதற்கான புதிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், எதிர்மறை தாக்குதல்களால் பின்வாங்கப் போவதில்லை என தெரிவித்துள்ள சாமுவேல் ஸ்பிண்டன், உண்மையான தகவல்கள் மக்களைச் சென்றடைந்தால் ஜனநாயகம் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் தனது பிரச்சாரத்தைத் தொடர்கிறார்.






