Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் AI மற்றும் “நிலையான வளர்ச்சி தொடர்பான துறை” நிபுணர்களுக்கு அதிக சம்பள உயர்வு

சுவிட்சர்லாந்தில் AI மற்றும் “நிலையான வளர்ச்சி தொடர்பான துறை” (Sustainability) நிபுணர்களுக்கு அதிக சம்பள உயர்வு

சுவிட்சர்லாந்தில் AI மற்றும் “நிலையான வளர்ச்சி தொடர்பான துறை” (Sustainability) நிபுணர்களுக்கு அதிக சம்பள உயர்வு

சுவிட்சர்லாந்தில் அரிதாக கிடைக்கும் சிறப்பு திறன்கள் கொண்ட பணியாளர்களுக்கு அதிக சம்பள உயர்வு கிடைத்து வருவதாக வேலைவாய்ப்பு நிறுவமான அடெக்கோ (Adecco) வெளியிட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 15,000-க்கும் அதிகமான வேலை நேர்முகப் பேட்டிகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வின் படி, பல நிறுவனங்கள் தற்போது பணியாளர்களின் எண்ணிக்கையை பொதுவாக அதிகரிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட திறமைகள் கொண்ட நிபுணர்களை மட்டுமே இலக்காகக் கொண்டு பணியில் அமர்த்துகின்றன.

N8 6

இதனால் பொதுவான பணிகளில் சம்பள உயர்வு மிதமான அளவில் இருந்தாலும், AI, Sustainability மற்றும் ESG (Environmental, Social and Governance) துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிகளவில் சம்பள உயர்வு கிடைத்து வருகிறது.

அடெக்கோவின் மதிப்பீட்டின்படி, சம்பள உயர்வு இனி பதவி நிலையை விட திட்டங்களுக்கு வழங்கும் பங்களிப்பு மற்றும் பெறப்பட்ட முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், சூரிச் (Zürich) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரிபவர்கள், தேசிய சராசரியை விட ஆண்டுக்கு 5,000 முதல் 10,000 சுவிஸ் பிராங்குகள் வரை அதிக வருமானம் பெறுகின்றனர். இதை வேலைவாய்ப்பு சந்தையில் “சூரிச் பிரீமியம்” என குறிப்பிடுகின்றனர்.

KeystoneSDA

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button