ஈஸ்டர் அமைதி பேரணி: உலக வன்முறைக்கு எதிராக குரல்
ஈஸ்டர் அமைதி பேரணி: உலக வன்முறைக்கு எதிராக குரல்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் நடைபெற்ற ஈஸ்டர் அமைதி பேரணி, உலகம் முழுவதும் நடைபெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தியதுடன், அமைதிக்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தியது.
இந்த பேரணியை சுமார் 40 அமைப்புகள் — குறிப்பாக இடதுசாரி மற்றும் மத சார்ந்த குழுக்கள் — இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. ஆண்டுதோறும் ஈஸ்டர் திங்கட்கிழமை நடைபெறும் இந்த பேரணி, நகரின் புறநகரப் பகுதிகளில் இருந்து தொடங்கி பேராலயச் சதுக்கம் வரை செல்வது வழக்கம்.
பேரணியில் வண்ணக்கொடி (Rainbow) கொடிகள் அசைந்தன. அதேவேளை, சுவிட்சர்லாந்து பாலஸ்தீனம் நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பதாகைகளில் முன்வைக்கப்பட்டிருந்தன. போர்கள், இனஅழிப்பு, இன சுத்திகரிப்பு மற்றும் பல்வேறு வன்முறைகள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக பேரணியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்த வன்முறைகளுக்கு முன் பலர் தம்மை இயலாமையாக உணர்கிறார்கள். ஆனால், நாம் போரும் வன்முறைக்கும் எதிராக போராடும் நீண்ட வரிசையில் ஒரு பகுதியாக இருக்கிறோம்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பேரணியில் உரையாற்றிய Virginia Köpfli, “குண்டுவெடிப்புகள், படுகொலைகள், பஞ்சம் போன்ற தகவல்கள் நாள்தோறும் நம்மை சூழ்ந்துள்ளன. இதில் மிகவும் பயமளிப்பது வன்முறை அல்ல, அதற்கே நாம் இப்போது பழகிக் கொண்டிருப்பதே” என்று தெரிவித்தார்.
அமைதி முயற்சிகள் பல நேரங்களில் அறியாமையானதாக (naïve) காட்டப்படுகின்றன. ஆனால் அதிக ஆயுதங்கள் அமைதியை உருவாக்கும் என்றும், பிரிவினை பாதுகாப்பை வழங்கும் என்றும் நம்புவதே உண்மையான அறியாமை எனவும் அவர் வலியுறுத்தினார்.
சுவிட்சர்லாந்தில் ஈஸ்டர் அமைதி பேரணிகள் 1960களிலிருந்தே நடைபெற்று வருகின்றன. குளிர்போர் முடிவின் பின்னர் பெர்னில் இந்த பாரம்பரியம் சற்றே குறைந்திருந்தாலும், இராக் போரில் அமெரிக்கா படையெடுப்பு 2003 பிறகு 2003ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





