Swiss News In Tamil

பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து அரசியல் மனப்பான்மையில் பெரிய வித்தியாசங்கள்: புதிய ஆய்வு

பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து அரசியல் மனப்பான்மையில் பெரிய வித்தியாசங்கள்: புதிய ஆய்வு

பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து அரசியல் மனப்பான்மையில் பெரிய வித்தியாசங்கள்: புதிய ஆய்வு

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து மக்களின் அரசியல் மற்றும் சமூக மனப்பான்மையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதாக புதிய Franco-Swiss ஆய்வு தெரிவிக்கிறது.

சர்வதேச சந்தை ஆய்வு நிறுவனம் Ipsos மேற்கொண்ட இந்த ஆய்வின்படி, நேரடி ஜனநாயக முறைக்கு இரு நாடுகளிலும் அதிக ஆதரவு காணப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் 86 சதவீத மக்களும், பிரான்சில் 79 சதவீத மக்களும் அடிக்கடி மக்கள் வாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால், அரசின் பங்கு குறித்து இரு நாடுகளின் பார்வையில் பெரிய வேறுபாடு காணப்படுகிறது. பிரான்சில் 62 சதவீத மக்கள் அரசாங்கம் சமூக மற்றும் பொருளாதார விவகாரங்களில் அதிக தலையீடு செய்ய வேண்டும் என கருதுகின்றனர். இதே கருத்தை சுவிட்சர்லாந்தில் 34 சதவீத மக்கள் மட்டுமே ஆதரித்துள்ளனர்.

N3

எதிர்காலம் குறித்த நம்பிக்கையிலும் இரு நாடுகளுக்கிடையில் வித்தியாசம் தென்படுகிறது. பிரான்சில் 69 சதவீத மக்கள் அடுத்த தலைமுறை தற்போதைய தலைமுறையை விட மோசமான சூழலில் வாழும் என கருதுகின்றனர். சுவிட்சர்லாந்தில் இந்த எண்ணிக்கை 49 சதவீதமாக உள்ளது.

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை இரு நாடுகளிலும் குறைவாகவே இருப்பதாக ஆய்வு காட்டுகிறது. குறிப்பாக பிரான்சில், பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்க அரசியல் தலைவர்களை நம்புகிறோம் என கூறியவர்கள் வெறும் 8 சதவீதம் மட்டுமே.

உலகளாவிய பொருளாதார அசாதாரண நிலை, போர் அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மனநிலையிலும் அரசியல் அமைப்புகள் மீதான பார்வையிலும் மாற்றங்கள் உருவாகி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ©WRS

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button