Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் உணவு விநியோகத்தில் ஈடுபடும் ரோபோக்கள்

சுவிட்சர்லாந்தில் உணவு விநியோகத்தில் ஈடுபடும் ரோபோக்கள்

உலகின் மிகப்பெரிய உணவு விநியோக தளங்களில் ஒன்றான Just Eat Takeaway, தனது வீட்டு விநியோக சேவையை (Home Delevery) ரோபோட்டுகள் மூலம் பரிசோதிக்க சுவிஸ் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது.

இந்த முயற்சிக்காக, ETH Zurich (சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஒவ் டெக்னொலஜி) இன் துணை நிறுவனமான RIVR இணைந்து செயல்படுகிறது. RIVR 2023 முதல் செயல்படும் ஒரு யூனிவர்சிட்டி ஸ்பின்-ஆஃப் நிறுவனம் ஆகும், இது ரோபோட்டிக்ஸ் துறையில் சிறந்த அனுபவம் கொண்டது.

இந்த முன் முயற்சி பற்றி குறித்த நிறுவனம் குறிப்பிடுகையில்,
“Just Eat Takeaway.com உடன் இணைந்து, சுவிட்சர்லாந்தில் தொடங்கி புதிய தலைமுறை ரோபோடிக் விநியோகங்களை உருவாக்குகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் மற்ற ஐரோப்பிய நகரங்களில் கூட இதை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தில், சில்லறை கடைகள் மற்றும் வசதியான கடைகளிலும் இது விரிவடைய வாய்ப்பு உள்ளது.” என குறிப்பிட்டது.

f il cibo da asporto ora lo consegna il robot 1kmzg

சோதனை கட்ட விவரங்கள்

Zurich நகரில் நடைபெறும் சோதனைச் கட்டத்தில், நான்கு கால்கள் கொண்ட ரோபோக்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் திறன் மற்றும் சிக்கலான நகர்ப்புற இடங்களில் பயணிக்கும் சக்கரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஒர்லிக்கோன் (Oerlikon) நகரில் உள்ள Zekis World உணவகத்தின் சார்பாக Just Eat வாடிக்கையாளர்களுக்கு விநியோகங்களை செய்யும்.

முதல் 30 நாட்களுக்கு, ரோபோக்களின் இயக்கம் நேரடியாக கண்காணிக்கப்படும்; பின்னர் முழு செயல்முறையும் தொலைதூர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படும்.

RIVR ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, இந்த ரோபோக்கள் சுற்றுப்புற சூழலுக்கு தானாக சரிசெய்து, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நேர்த்தியான விநியோக சேவை வழங்கக்கூடியவை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button