Swiss News In Tamil

கடுமையான இழப்பைச் சந்தித்துள்ள சுவிஸ் ஏற்றுமதித்துறை

கடுமையான இழப்பைச் சந்தித்துள்ள சுவிஸ் ஏற்றுமதித்துறை

சுவிஸ் ஏற்றுமதித்துறை மே மாதத்தில் கணிசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள ஃபெடரல் சுங்க அலுவலகம், சுவிஸ் ஏற்றுமதி, 13.6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சுவிட்சர்லாந்திலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 39.6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

ட்ரம்ப் கூடுதல் வரிகள் விதிக்கப்போகிறார் என தகவல் வெளியானதும், அவசர அவசரமாக மார்ச் மாதமே ஏற்றுமதி நடக்க, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

சுவிஸ் ஏற்றுமதித்துறை
சுவிஸ் ஏற்றுமதித்துறை

ஆனால், ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. இந்நிலையில், சுவிஸ் ஏற்றுமதித்துறை மே மாதத்தில் கணிசமான இழப்பை சந்தித்துள்ளது.

ஏற்றுமதி குறைந்ததால், சுவிட்சர்லாந்துக்கு 21.01 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

@KeystoneSDA

Related Articles

Back to top button