Swiss News In Tamil

சுவிஸில் சில மாகாணங்களில் இடம்பெறும் மோசடி : 3,000 ஃப்ராங்குகளை இழந்த நபர்

சுவிஸில் சில மாகாணங்களில் இடம்பெறும் மோசடி : 3,000 ஃப்ராங்குகளை இழந்த நபர்

ஜெனீவா மற்றும் வெளட் பகுதிகளில் தற்போது பரவலாகச் செயல்பட்டு வரும் ஒரு புதிய மோசடி வகை குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா இணையத்தளம் ஒன்று வெளியிட்ட செய்தி ஒன்றின்படி, ஒரு நபர் முதலில் 40 CHF தண்டம் செலுத்த வேண்டுமெனக் கூறும் செய்தியை SMS இல் பெற்றார். செய்தியில் உள்ள லிங்கைக் கிளிக் செய்து தனது கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளிட்ட பின்பு, அவருக்கு வங்கியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில், அவரது கார்டில் மோசடி முயற்சி நடந்துள்ளது என்றும், பணம் தடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, வங்கியின் பெயரில் மற்றொரு செய்தி வந்தது. அதில், ஒரு கோடுடன், கார்டை மீண்டும் செயல்படுத்தலாம் என்று கூறப்பட்டது. அந்த கோடினை அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நபரிடம் கூறினார்.

ஃப்ராங்குகளை

ஆனால், அதுவரை அவர் நினைத்தது போல ஆழைப்பு எடுத்தவர்கள் வங்கியாளர்களோ இல்லை – அந்த நபரும் மோசடி குழுவைச் சேர்ந்தவரே. இவர் உண்மையான செயலி வழியாகக் கிடைத்த  Code  ஐபயன்படுத்தி, அந்த நபரின் கணக்கில் இருந்து சில நிமிடங்களில் 3,000 CHF ஐ திருடி விட்டார்.

மொத்தமாக, ஜெனீவா மற்றும் வெளட்பகுதிகளில் மட்டும் இந்த மோசடி மூலம் CHF 3 மில்லியனை கடந்த இழப்புகள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இது மேலும் அதிகமாக இருக்கக்கூடும், ஏனெனில் பலர் இந்த மோசடியைப் பொறுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • SMS அல்லது Email வழியாக வரும் எந்தவொரு கட்டணத் தகவலையும் நம்ப வேண்டாம்.
  • உங்கள் வங்கி ஆப்பில் நேரடியாக சென்று எந்தவொரு செயற்பாடும் உறுதி செய்யவும்.
  • வங்கியிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் OTP கோடுகள் குறித்து எப்போதும் அதிக கவனமாக இருங்கள் – அவற்றை யாரிடமும் பகிர வேண்டாம்.
  • சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து உடனடியாக உங்கள் வங்கியையும், காவல்துறையையும் தொடர்பு கொள்ளவும்.  என பொதுமக்களுக்கு காவல்துறை ஆலோசனைகளை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button