Swiss News In Tamil

மோட்டார் கார் உற்பத்தியில் உலக சாதனை படைத்த சுவிஸ் மாணவர்கள்

சுவிட்சர்லாந்து மாணவர்கள் மோட்டார் கார் உற்பத்தியில் உலக சாதனை படைத்துள்ளனர்.

சுவிஸ் பல்கலைக்கழக மாணவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள இலத்திரனியல் கார் மிக குறுகிய நேரத்தில் வேகத்தை அதிகரிக்க கூடியது என தெரிவிக்கப்படுகிறது.

பூச்சியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தை 0.956 செக்கன்களில் அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் கார் உற்பத்தியில் உலக சாதனை

சூரிச் தொழில்நுட்ப நிறுவகம் மற்றும் லுசார்ன் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பிரிவு மாணவர்கள் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

Students from ETH Zurich and Lucerne University of Applied Sciences and Arts have broken the previous world record for acceleration with their hand-​built electric racing car, mythen. The vehicle accelerated from zero to 100 km/h in 0.956 seconds over a distance of 12.3 metres.

மைத்தென் (Mythen) என இந்த வாகனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மிகக் குறைந்த அளவு நேரத்தில் வாகனம் ஒன்றின் வேகம் அதிகரிப்பு தொடர்பிலான சாதனை Stuttgart பல்கலைக்கழக மாணவர்களினால் நிலைநாட்டப்பட்டிருந்தது.

மோட்டார் கார் உற்பத்தியில் உலக சாதனை

பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை அடைவதற்கு இந்த வாகனத்திற்கு 1.461 செக்கன்கள் தேவைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 30 மாணவர்களினால் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button