Local Swiss News

சூரிச்சில் Cycle Week காரணமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள்

சூரிச்சில் Cycle Week காரணமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள்

சூரிச்சில் Cycle Week காரணமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள்

சூரிச் (Zürich) நகரில் நடைபெறும் “Cycle Week 2026” நிகழ்வை முன்னிட்டு, மே 26 முதல் ஜூன் 1, 2026 வரை Europaallee பகுதியைச் சுற்றியுள்ள பல வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

Stadt Zürich வெளியிட்ட தகவலின்படி, குறிப்பிட்ட காலப்பகுதியில் மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு சில வீதிகளில் முழுமையான போக்குவரத்து தடை அமலில் இருக்கும்.

இதன்படி, Kasernenstrasse வீதியில் Postbrücke மற்றும் Gessnerbrücke இடையிலான பகுதியிலும், Lagerstrasse வீதியில் Kasernenstrasse மற்றும் Kanonengasse இடையிலான பகுதியிலும் வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

சூரிச்சில் Cycle Week

இந்தத் தடை 2026 மே 26 செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் ஜூன் 1 திங்கட்கிழமை மதியம் சுமார் 1 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அப்பகுதியில் வசிப்போர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்கு Eisgasse, Freischützgasse மற்றும் Reitergasse வழியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றுப்பாதைகள் மூலம் ஒழுங்குபடுத்தப்படும் என்றும், தவறான இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் கட்டணத்துடன் இழுத்துச் செல்லப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், இந்த போக்குவரத்து உத்தரவை மீறுபவர்கள் மீது சுவிட்சர்லாந்து சாலைப் போக்குவரத்து சட்டத்தின் (SVG) கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  @Stadt Zürich

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button