சுவிஸ் மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி! 2027-ல் சுகாதார காப்பீடு 5% உயருமா?
சுவிஸ் மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி! 2027-ல் சுகாதார காப்பீடு 5% உயருமா?

சுவிஸ் மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி! 2027-ல் சுகாதார காப்பீடு 5% உயருமா?
சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்கள் அடுத்த ஆண்டும் கணிசமாக உயரக்கூடும் என ஒப்பீட்டு இணையதளமான Bonus.ch எச்சரித்துள்ளது.
2026-ல் ஏற்கனவே 4.4 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில்,
2027-ஆம் ஆண்டில் சராசரியாக 5 சதவிகிதத்திற்கு அருகில் கட்டண உயர்வு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதைவிட பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா?
சில காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது குறிப்பிட்ட கட்டண வகைகளில், உயர்வு 10 சதவிகிதத்தையும் தாண்டக்கூடும்!
மிக மோசமான சூழ்நிலையில், சில தனிநபர்களின் பிரீமியம் 20 சதவிகிதம் வரை கூட அதிகரிக்கலாம் என Bonus.ch தெரிவித்துள்ளது.
இதற்கான முக்கிய காரணமாக சுகாதாரச் செலவுகளின் தொடர்ச்சியான அதிகரிப்பு குறிப்பிடப்படுகிறது.

குறிப்பாக, இயன்முறை சிகிச்சை செலவுகள் 7 சதவிகிதமும், புறநோயாளர் மருத்துவர்களின் செலவுகள் 6 சதவிகிதமும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரீமியம் உயர்வு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.
மாகாணம், வயது, காப்பீட்டு நிறுவனம், கழிவுத்தொகை மற்றும் காப்பீட்டு மாதிரி ஆகியவற்றைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.
அதாவது…
2027-ல் சுவிஸ் மக்களின் மாதாந்திர சுகாதாரச் செலவு இன்னும் அதிகரிக்குமா?
அடுத்த ஆண்டு பிரீமியம் எவ்வளவு உயரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.





