Swiss News In Tamil

“சுவிஸில் போக்குவரத்து விதிமீறல்: இந்திய சுற்றுலாப் பயணிக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்

“சுவிஸில் போக்குவரத்து விதிமீறல்: இந்திய சுற்றுலாப் பயணிக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்

“சுவிஸில் போக்குவரத்து விதிமீறல்: இந்திய சுற்றுலாப் பயணிக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்

இந்திய இளம்பெண்ணுக்கு சுவிட்சர்லாந்தில் நடந்த போக்குவரத்து விதிமீறலுக்காக சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் அபராத நோட்டீஸ் வந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.

Poan Sapdi என்ற பெயரில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அந்த இளம்பெண், சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றதாக தெரிவித்துள்ளார். அந்த பயணத்தின் போது போக்குவரத்து விதி மீறல் இடம்பெற்றதாகக் கூறி தற்போது அவருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அபராதத் தொகை இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்ச ரூபாயாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “என்னைப் போல வேறு யாராவது இப்படியான அனுபவத்தை சந்தித்துள்ளீர்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பலர், சுவிட்சர்லாந்து மட்டுமல்லாது ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு பின்னர் அபராத நோட்டீஸ்கள் அனுப்பப்படுவது சாதாரணமான விடயம்தான் என தெரிவித்துள்ளனர்.

N5a 1

ஜேர்மனிக்கு சென்றிருந்த ஒருவர், நாடு திரும்பிய சில மாதங்களுக்குப் பிறகு தனக்கும் இதேபோன்ற அபராத அறிவிப்பு வந்ததாக கூறியுள்ளார். மற்றொருவர், இத்தாலி பயணத்திற்குப் பிறகு சுமார் 15,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு நோட்டீஸ் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒன்றரை லட்ச ரூபாய் அபராதம் என்பது மிகவும் அதிகமான தொகை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அபராதத்தை குறைக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியுமா என்று அந்த இளம்பெண் கேட்டபோது, “சுவிட்சர்லாந்து போக்குவரத்து விதிமுறைகளில் மிகவும் கடுமையான நாடாகும். அபராதத்தை புறக்கணித்தால் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும்” என சிலர் எச்சரித்துள்ளனர்.

மேலும், முழுத் தொகையையும் ஒரே தடவையில் செலுத்த முடியாவிட்டால், தவணை முறையில் கட்ட அனுமதி கோரலாம் என்றும் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button