Swiss News In Tamil

Dürnten ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் விபத்து

Dürnten ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் விபத்து

Dürnten ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் விபத்து வெள்ளிக்கிழமை மாலை (ஜூலை 19, 2024)  Dürnten இல் நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

தூர்தன் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இரவு சுமார் 9:45 மணியளவில், 44 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் Edikerstrasse இல்  Dürnten நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாதசாரிகள் கடந்து செல்வதற்காக, போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நிறுத்தப்பட்டார்.

தனக்கு முன்னால் இருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நிறுத்தப்பட்டதை அவதானிக்காத அதன் பின்னால் வந்த கார் ஓட்டுனர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதினார். இதனால் மோட்டார் சைக்கிள் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மீது பலமாக மோதியது.

 Dürnten

இந்த விபத்தில் 23 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் 56 வயதான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். காயமடைந்தவர்கள் உடனடியாக 144 மீட்பு சேவை மற்றும் மருத்துவமனை மீட்பு சேவையின் முதலுதவிக்குப் பிறகு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கார் ஓட்டுநர் காயமின்றி இருந்தார்; அவரிடம் இருந்து ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி எடுக்க விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. சூரிச் கன்டோனல் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தால் விபத்து தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாகஇ நுனமைநசளவசயளளந பாதிக்கப்பட்ட பகுதியில் பல மணி நேரம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த வீதியில் அமைந்துள்ள இந்துக்களின் ஆலயமான ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகா உற்சவம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button