Swiss News In Tamil

பிரான்ஸ் தேர்தல்: வலதுசாரிக் கட்சிக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் பிரச்சாரம்

பிரான்ஸ் தேர்தல்: வலதுசாரிக் கட்சிக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் பிரச்சாரம்

பிரான்ஸ் தேர்தல்: வலதுசாரிக் கட்சிக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் பிரச்சாரம் பிரான்ஸ் தேர்தலில், வலதுசாரிக் கட்சியை வெற்றிபெற விடக்கூடாது என, சுவிட்சர்லாந்தில் பிரச்சாரம் நடைபெற்றுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள விடயம்

பிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். ஆனால், சமீபத்திய ஐரோப்பிய தேர்தல் முடிவுகளும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும், முதல் சுற்று தேர்தல் முடிவுகளும், வலதுசாரிக் கட்சிக்கே சாதகமாக உள்ளன.

பிரான்ஸ் தேர்தல்

ஆகவே, பிரான்ஸ் அரசியல்வாதிகளுக்கும், மக்களில் ஒரு பிரிவினருக்கும், புலம்பெயர்தல் எதிர்ப்பு முதலான தீவிரக் கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. ஆகவே, அக்கட்சியை வெற்றிபெற விடாமல் செய்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வலதுசாரிக் கட்சிக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் பிரச்சாரம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

வலதுசாரிக் கட்சிக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் பிரச்சாரம்

பிரான்ஸ் பொருளாதாரத்துறை அமைச்சரான Bruno Le Maire, சுவிட்சர்லாந்தில் வாழும் பிரெஞ்சுக் குடிமக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், வலதுசாரிக் கட்சியை வெற்றிபெற விடக்கூடாது என வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

பிரான்ஸ் தேர்தல்

சுவிட்சர்லாந்தில் வாழும் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்த அவர், சுவிட்சர்லாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே நடைமுறையிலிருக்கும் இரட்டை வரி முறையை ஒழிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆளும் மேக்ரான் கட்சி சார்பில் வெளிநாடு வாழ் பிரான்ஸ் நாட்டவர்களின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடும் Marc Ferracciக்கு ஆதரவாக Bruno Le Maire வாக்குகள் சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button