இன்று செவ்வாய்க்கிழமை மாலை பேர்ன்னின் பழைய நகரில் திடீரென பரவலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் சுமார் 7 மணி தொடக்கம் 7:30 மணி வரை நீடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்மாற்றி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறுதான் மின்வெட்டுக்கு காரணம் எனவும் அசௌகரியங்களுக்கு தாங்கள் மன்னிப்புகோருவதாகவும் எனர்ஜி எண்ட் வாஸ்ஸர்இ தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த மின்வெட்டு காரணமாக ஹோட்டல்கள்இ உணவகங்கள் மற்றும் பல்வேறு வீடுகள் என்பன பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



