Swiss News In Tamil

வின்டர்தூரில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் பலி

வின்டர்தூரில் ரயில் கடவையை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று வியாழன் அதிகாலை, சென்ட்காலன் திராசவிலுள்ள லெவல் கிராசிங்கில் இடம்பெற்றுள்ளது. 41 வயதுடைய பெண் மீது ரயில் மோதி அவர் படுகாயமடைந்தார்.

வின்டர்தூரில்

சூரிச் கன்டோனல் போலீசார் அறிவித்தபடி, அதிகாலை 5 மணிக்குப் பிறகு, சென்ட்காலன் திராசவிலுள்ள லெவல் கிராசிங்கில் அந்தப் பெண் வீதியை கடக்க முயன்றதாகவும் அந்நேரத்தில் ரயில் எச்சரிக்கை சமிக்ஞையை வழங்கி போதும் பெண் மீது ரயில் மோதுண்டதாக தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் எந்தப் பக்கத்திலிருந்து ரயில்வே கிராசிங்கில் நுழைந்தார், ரயில்வே தடைகள் திறந்திந்ததா அல்லது மூடப்பட்டிருந்ததா என்பது தொடர்பான தடயங்களை பகுப்பாய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவ்விபத்து தொடர்பாக இதுவரை மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related Articles

Back to top button