Swiss News In Tamil

சுவிசிலும் ஜேர்மனியிலும் கிடந்த தம்பதியினரின் சடலங்கள்..!

சுவிசிலும் ஜேர்மனியிலும் கிடந்த தம்பதியினரின் சடலங்கள்..! சுவிட்சர்லாந்து பொலிசாரும் ஜேர்மன் பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட ஒரு விசாரணையில், கணவன் ஒரு நாட்டிலும், மனைவி ஒரு நாட்டிலும் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.

காணாமல் போன பெண்

ஒரு வாரத்துக்கு முன், 44 வயது பெண்ணொருவர் காணாமல்போன நிலையில், அவர் ஜேர்மனியின் பிராங்க்பர்ட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

சுவிட்சர்லாந்து

அதே நேரத்தில், அந்தப் பெண்ணின் கணவரான 54 வயது நபருடைய உடலும், சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Merenschwand என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

எப்படி இருவரும் வெவ்வேறு இடங்களில் உயிரிழந்தார்கள், என்ன நடந்தது என்பதை அறிய இரு நாட்டு பொலிசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Articles

Back to top button