Swiss News In Tamil

சுவிஸ் விமானபோக்குவரத்து தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சுவிஸ் விமானபோக்குவரத்து தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு பிரெஞ்சு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இன்று பிரெஞ்சு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

swiss airlines

கடைசி நேரத்தில் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டிமையினால் மீண்டும் வழக்கமான விமான அட்டவணையை நிறுவுவதில் உள்ள காலதாமத்தினாலையே பல விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, சுவிஸ் ஏர்லைன் இன்று சூரிச் மற்றும் பாரிஸ் மற்றும் நைஸை இணைக்கும் விமானங்களை ரத்து செய்தது.

மறுபுறம்இ பிரெஞ்சு நகரங்களுக்கும் ஜெனீவாவிற்கும் இடையிலான விமானங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இது மாத்திரமின்றி சுவிட்சர்லாந்து நாளை வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்கு தனது விமானங்களை மீண்டும் தொடங்க உள்ளது.

Tel Aviv

‘ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது இஸ்ரேல் நிலைமை மிகவும் சாதகமாக உள்ளமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமானநிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், லெபனானின் பெய்ரூட்டுக்கான விமானங்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரானிய வான்பரப்பு மீது பறப்பதை சுவிட்சர்லாந்து தொடர்ந்து தவிர்க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button