தென்னிந்தியாவின் பிரபல இளம் இசையமைப்பாளரான அனிருத் அவர்களது மாபெரும் இசை நிகழ்வு ஒன்று நேற்று சனிக்கிழமை சூரிச்சில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் அனிருத் மற்றும் அவரது குழுவினர் சூரிச் விமானநிலையம் ஊடாக சுவிட்சர்லாந்தை வந்தடைந்தனர்.

நேற்று இடம்பெற்ற குறித்த இசை நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



