Saturday, 19 September 2026
Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் 65 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த கார்

சுவிட்சர்லாந்தில் 65 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்கள் இருவர் * சுவிட்சர்லாந்தில், கார் ஒன்று 65 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்கள்

சுவிட்சர்லாந்தின் Graubünden மாகாணத்தில், ஒரு 19 வயது பெண்ணும் அவரது தோழியும் காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

Ilanz என்னும் நகரில் அவர்கள் பயணித்துக்கொண்டிருக்கும்போது, சாலையில் இருந்த கொண்டை ஊசி வளைவு ஒன்றில் கார் திரும்பும்போது, கார் சாலையிலிருந்து சறுக்கி, மலையிலிருந்து உருண்டு, மரங்களில் மோதி, 65 அடி பள்ளத்தில் போய் விழுந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில்

விழுந்த காரிலிருந்த பெண்களே அவசர உதவியை அழைத்துள்ளார்கள். விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினர் அந்தப் பெண்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் இருவருக்குமே லேசான காயம்தான் ஏற்பட்டுள்ளது.