Swiss News In Tamil

சுவிஸ் எல்லைகளை கட்டுப்படுத்த வலதுசாரி கட்சி கோரிக்கை

சுவிஸ் எல்லைகளை கட்டுப்படுத்த வலதுசாரி கட்சி கோரிக்கை கட்சி கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்து வாக்கெடுப்பு நடத்த வலதுசாரி கட்சி முன்வந்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டமிடப்பட்ட முன்மொழிவு இருப்பதாக பிரபல சுவிஸ் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

2009 இல், ஸ்விட்சர்லாந்து ஷெங்கன் பகுதியில் இணைந்தபோது அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை கைவிட்டது.

அந்த நடவடிக்கை ஒரு தவறு, ஏனென்றால் அது புலம்பெயர்ந்தவர்களுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியாக கதவுகளைத் திறந்துவிட்டதாக கருதுவதாக குறித்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளத.

சுவிஸ் எல்லைகளை

‘புகலிடக்கோரிக்கையாளர்களின் புள்ளிவிவரங்கள் மிக அதிகமாக உள்ளன என்றும் குறித்த கட்சி குறிப்பிட்டுள்ளதோடு, ‘பாதுகாப்பான மூன்றாம் நாடுகளில் இருந்து புகலிடம் கோரி புலம்பெயர்ந்தவர்களால் எங்கள் அமைப்பை துஷ்பிரயோகம் செய்வதை நாங்கள் நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான மக்களின் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் எனவும் புதிய வாக்கெடுப்பின் குறிக்கோள், நாட்டின் எல்லைகளில் ‘பரந்த கண்காணிப்பை’ நிறுவுவதே என குறித்த வலதுசாரி கட்சி தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button