சுவிட்சர்லாந்தில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரிப்பு : சுவிட்சர்லாந்தில் சில துறைகளில் 10,000 க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பல தொழில்கள் திறமையான ஊழியர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் அதே வேளையில், சில துறைகள் மற்றவர்களை விட இந்த விஷயத்தில் மோசமாக உள்ளன என்று சுவிஸ் வேலை சந்தை Swiss job market analyst, x28 தெரிவித்துள்ளது .
உதாரணமாக, சுகாதாரத் துறையில் 15,790 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மையாக செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களும், கட்டுமானத்துறைக்கு 13,566 கூடுதல் பணியாளர்களும் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிகப்படுகிறது.

சில்லறை விற்பனைத் துறையும் 12,761 பணியாளர்கள் பற்றாக்குறையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் தற்போது 10,478 காலியிடங்கள் உள்ளன.
பிராந்தியங்களின் அடிப்படையில், சூரிச் மற்றும் பெர்ன் முறையே 55,113 மற்றும் 37,939 பணியிடங்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனைதொடர்ந்து ஆர்காவ் அடுத்த இடத்தில் 20,350 வெற்றிடங்களோடும், சென்ட்காலன் கன்டோனில் 18,178 வெற்றிடங்களும் மற்றும் லூசர்ன் 17,021பேருக்கான வெற்றிடங்களுடனும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






