Swiss News In Tamil

போலி போலீஸ் மோசடி – ஃப்லிம்ஸில் முதிய பெண்ணிடம் இலட்சக்கணக்கான பிராங்குகள் மோசடி

போலி போலீஸ் மோசடி – ஃப்லிம்ஸில் முதிய பெண்ணிடம் இலட்சக்கணக்கான பிராங்குகள் மோசடி

சுவிட்சர்லாந்தின் Flims பகுதியில் வசிக்கும் முதிய பெண் ஒருவர் பல மாதங்களாக போலி போலீஸ் மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, இலட்சக்கணக்கான சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள பணமும் தங்கமும் இழந்துள்ளார்.

கிரௌவுண்டன் கன்டோனல் போலீசார் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அந்த பெண்ணை ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார்.

பின்னர் கற்பனையான சம்பவங்களை கூறி, அந்த பெண்ணின் நம்பிக்கையை பெற்ற மோசடிக்காரர்கள், பாதுகாப்பு காரணங்களைக் கூறி பணமும் தங்கமும் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், பல இலட்சம் சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள பணம் மற்றும் தங்கம் நான்கு முறை தனித்தனியாக குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஒப்படைப்புகள் அனைத்தும் நேரடி சந்திப்பு இன்றியே நடைபெற்றுள்ளன.

சில பண ஒப்படைப்புகள் Flims பகுதியில் உள்ள Plaids விளையாட்டு மைதானத்திலும், மற்றொன்று Chur நகரிலுள்ள Daleu மயானப் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

N1 1
Foto

பின்னர் சந்தேகம் அடைந்த அந்த பெண், சம்பவத்தை கிரௌவுண்டன் கன்டோனல் போலீசார்க்கு அறிவித்துள்ளார்.

இந்த மோசடி சம்பவம் தொடர்பாக, பணம் மற்றும் தங்கம் வைக்கப்பட்ட இடங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது அசாதாரண நிகழ்வுகளை கவனித்தவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், போலீஸ் அல்லது வங்கிகள் ஒருபோதும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பணம் அல்லது நகைகளை ஒப்படைக்குமாறு கேட்கமாட்டார்கள் என அதிகாரிகள் மீண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button