Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் இயற்கை விவசாயம் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் இயற்கை விவசாய நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. அதிகளவான காணிகளில் இயற்கை விவசாயம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

1996 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது தற்பொழுது இயற்கை முறையிலான விவசாயம் குறிப்பாக மரக்கறி செய்கைகள் அதிகரித்துள்ளன. 1996 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது தற்பொழுது ஆறு மடங்காக விவசாய செய்கைகள் அதிகரித்துள்ளன.

சுவிட்சர்லாந்தில்

சுவிஸ் மத்திய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளில் 25 வீதமான விவசாயிகள் இயற்கை மறக்கறி செய்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது சுமார் 1250 ஹெக்ரெயார் மரக்கறி செய்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இயற்கை அல்லது செயற்கை முறையில பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து கூடுதல் கரிசனை கொள்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

(c) Tamilnews

Related Articles

Back to top button