Swiss News In Tamil

பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மேக்ரோன் சுவிட்சர்லாந்து விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மேக்ரோன் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் சுவிட்சர்லாந்தின் லவுசான் பல்கலைக்கழகத்திற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி எலொய்ன் பீரெஸ்ட் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் ஆகியோர் இந்தப் பல்கலைக்கழகத்தில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மேக்ரோன்

 

ஐரோப்பிய விவகாரங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகளிடமும் கேள்விகளை கேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (source:- tamilinfo)

Related Articles

Back to top button