Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் ஆபத்தான குழந்தை கார் இருக்கைகள் குறித்து எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் ஆபத்தான குழந்தை கார் இருக்கைகள் குறித்து எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் ஆன்லைன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகள் கார் இருக்கைகள் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யாத ஆபத்தான தயாரிப்புகள் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Federal Roads Office (ASTRA/USTRA) வெளியிட்ட தகவலின்படி, Wohnherz.ch மற்றும் Edelkraftshop.ch உள்ளிட்ட இணையதளங்களில் இந்த தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

“குழந்தைகளுக்கான பாதுகாப்பு கார் இருக்கை” அல்லது “பயண பாதுகாப்பு இருக்கை” போன்ற பெயர்களில் விற்பனை செய்யப்படும் இந்த பொருட்கள், உண்மையில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புகள் குழந்தைகளுக்கான சர்வதேச பாதுகாப்பு தரமான UNECE Regulation No.129 விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், விபத்து நேரங்களில் கடுமையான காயம் அல்லது உயிரிழப்பு அபாயம் அதிகமாக இருப்பதாகவும் ASTRA எச்சரித்துள்ளது.

சுவிட்சர்லாந்து செய்திகள், Swiss child car seat warning, ASTRA Switzerland, dangerous baby seat, online shopping Switzerland, child safety Switzerland, Switzerland Tamil News, சுவிஸ் பாதுகாப்பு எச்சரிக்கை, baby car seat recall, Swiss road safety

மேலும், தயாரிப்பு பொதியில் உள்ள சீன மொழி குறிப்புகளின் தானியங்கி மொழிபெயர்ப்பின் படி, இந்த பொருட்கள் வாகனங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் restraint system ஆக பயன்படுத்தப்பட வேண்டியவை அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தயாரிப்புகள் Tancheng Lingxiu Garment Factory என்ற சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்றும், வேறு பெயர்களில் பல ஆன்லைன் கடைகளிலும் கிடைக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்ற குழந்தை கார் இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என Federal Roads Office பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button