Swiss News In Tamil

சுவிஸ் Aargau மாநிலத்தில் விபத்தில் சிக்கிய தமிழ் இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி.!!

சுவிஸ் Aargau மாநிலத்தில் விபத்தில் சிக்கிய தமிழ் இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி.!! சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பாக எமது இணையத்தளம் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விபத்து சம்பவத்தில் சிக்கியவர்கள் தொடர்பான மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

DONT MISS IT –>> சுவிஸ் Aargau மாநிலத்தில் A1 நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து.!!

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தமிழ் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுவிஸ், Aargau,தமிழ் இளைஞர், சிகிச்சை, swisstamilnews
சுவிஸ் Aargau மாநிலத்தில் A1 நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 18 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் உள்ளிட்ட மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

மெர்ஸிடிஸ் ரக வாகனமொன்று ஏ1 பேடன் மேற்கு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து குடிபோதை அல்லது போதைப் பொருளினால் ஏற்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடையாது என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுவிஸ், Aargau,தமிழ் இளைஞர், சிகிச்சை, swisstamilnews

இந்த விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சென் கேலன் கான்டனில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளனர். மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

SwissTamilYotube, SwissTamilVlog, TamilSwiss, TamilTikTok, SwissSwiss Talent, Swiss Tamils

Related Articles

Back to top button