ஜெனீவாவில் திராட்சைத் தோட்டங்களை காப்பாற்ற புதிய நிதி திட்டம் சுவிட்சர்லாந்தின் Geneva பகுதியில் திராட்சை விவசாயம் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட திராட்சைத் தோட்ட உரிமையாளர்களுக்கு ஆதரவளிக்கும் புதிய திட்டத்தை அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர். இந்த திட்டம், உற்பத்தியை கட்டாயப்படுத்தாமல் திராட்சைத் தோட்டங்களை பாதுகாப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. State Council of Geneva இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேருக்கு ஆண்டுதோறும் 18,000 சுவிஸ் ஃப்ராங்க் வழங்க திட்டமிட்டுள்ளது. முக்கியமாக, திராட்சை அறுவடை நடைபெறாத நிலையிலும் இந்த உதவி வழங்கப்படும் என்பது விவசாயிகளுக்கு ஒரு முக்கிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக உள்ளூர் திராட்சைத் தொழில் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், சந்தை தேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் செலவின உயர்வு போன்ற காரணிகள் காரணமாக பலர் தங்கள் திராட்சைத் தோட்டங்களை அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையை தவிர்க்கும் மாற்று வழியாகவே இந்த நிதி உதவி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, ஏற்கனவே உள்ள உதவித் திட்டங்களுக்கு மேலாக இந்த ஆண்டிற்காக கூடுதலாக 2.3 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்க் ஒதுக்குமாறு அரசு கோரியுள்ளது. அதிகாரிகள் கூறுவதாவது, இந்த முயற்சி மூலம் ஜெனீவாவின் பாரம்பரியமான திராட்சைத் தோட்டப் பரப்பை பாதுகாத்து, விவசாயிகள் தங்கள் தொழிலை மாற்றம் செய்து தக்கவைத்துக்கொள்ள தேவையான கால அவகாசத்தை வழங்க முடியும் என்பதே. WRS