பெர்ன் நகரில் LGBTQ உரிமைக்காக ஆயிரக்கணக்கானோர் குரல்
பெர்ன் நகரில் LGBTQ உரிமைக்காக ஆயிரக்கணக்கானோர் குரல்

பெர்ன் நகரில் LGBTQ உரிமைக்காக ஆயிரக்கணக்கானோர் குரல்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் குயர் சமூகத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும் வலியுறுத்தப்பட்ட Christopher Street Day பேரணியில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பெர்ன் தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள Schützenmatte பகுதியில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, பின்னர் கூட்டாட்சி சதுக்கமான Bundesplatz நோக்கி நகர்ந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதாகைகள் மற்றும் கோஷங்களுடன் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
“அன்பு என்பது மனித உரிமை”, “எல்லோரும் சுதந்திரமாகும் வரை யாரும் உண்மையில் சுதந்திரமில்லை” போன்ற வாசகங்கள் பதாகைகளில் இடம்பெற்றிருந்தன.

இந்த ஆண்டிற்கான பேரணியின் கோஷமாக “Trans Joy is Resistance” என்ற வாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அதாவது, “திருநங்கை மகிழ்ச்சி என்பது எதிர்ப்பின் ஒரு வடிவம்” என்ற கருத்தை முன்வைத்து, தற்போதைய பாகுபாடு மற்றும் சமூக விவாதங்களில் திருநங்கை, intersex மற்றும் non-binary நபர்கள் வெறும் பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் பார்க்கப்படாமல், அவர்களின் வாழ்வின் மகிழ்ச்சியும் பெருமையும் வெளிப்பட வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்பட்டது.
Christopher Street Day என்பது 1969 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள Christopher Street பகுதியில் அமைந்திருந்த ஒரு கே பாரில் போலீசார் மேற்கொண்ட சோதனைக்கு எதிராக வெடித்த போராட்டங்களை நினைவுகூரும் நிகழ்வாகும். அந்த நிகழ்வு நவீன LGBTQ+ உரிமை இயக்கத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் வருடந்தோறும் பல நகரங்களில் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டில் சூரிக் (Zürich) மற்றும் வின்டர்தூர் (Winterthur) நகரங்களில் Christopher Street Day நிகழ்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© KeystoneSDA






