Swiss News In Tamil

ஷாப்பிங் மால்களில் 4,000 பிராங்கு மதிப்புள்ள திருட்டு : இரு வெளிநாட்டவர்கள் கைது

ஷாப்பிங் மால்களில் 4,000 பிராங்கு மதிப்புள்ள திருட்டு: இரு வெளிநாட்டவர்கள் கைது

சுவிட்சர்லாந்தின் ஸ்டெய்ன்ஹௌசன் பகுதியில் உள்ள சூகர்லாண்ட் (Zugerland) ஷாப்பிங் மாலில், நவம்பர் 18, 2025 அன்று, இரு ஆண்கள் சுமார் 1,200 பிராங்கு மதிப்புள்ள பிரிண்டர் இங்க் கார்ட்ரிட்ஜ்களை திருடியதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இடத்திலேயே பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை தடுத்து, போலீசார் கைது செய்தனர்.

பின்னர் செய்யப்பட்ட வாகன சோதனையில் மேலும் பல திருடப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் கூடுதல் பிரிண்டர் கார்ட்ரிட்ஜ்கள், மின்சார பற்சுத்திகள், மது பானங்கள் உள்ளிட்டவை அடங்கும். விசாரணையில்,  இச்சமபவங்கள் நவம்பர் 4ஆம் தேதி லூசெர்ன் மாநிலத்தின் இரண்டு நகரங்களிலும், நவம்பர் 18ஆம் தேதி ரோட்க்குரோய்ஸிலும் (Rotkreuz) உள்ள கடைகளில் திருடப்பட்டவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

மொத்தம் சுமார் 4,000 பிராங்குகள் மதிப்புடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 22 மற்றும் 42 வயதுடைய இரு ருமேனிய குடிமக்கள், பல முறை திருட்டு குற்றச்சாட்டில் சூக் மாநில விரைவு நீதிமன்றத்தால் பல ஆயிரம் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர்.

சூக் மாநில குடியேற்ற அலுவலகம் இருவரையும் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. சுவிஸ் வணிக வளாகங்களில் அதிகரிக்கும் திட்டமிட்ட கடைத்தனத் திருட்டை கட்டுப்படுத்த இது ஒரு எச்சரிக்கையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

© Kapo Zug

Related Articles

Back to top button