Swiss News In Tamil

2026ஆம் ஆண்டு 4.5 பில்லியன் ஃப்ராங்க் மதிப்பில் புதிய அரசுப் பத்திரங்கள்: சுவிஸ் அரசின் அறிவிப்பு

2026ஆம் ஆண்டு 4.5 பில்லியன் ஃப்ராங்க் மதிப்பில் புதிய அரசுப் பத்திரங்கள்: சுவிஸ் அரசின் அறிவிப்பு

சுவிட்சர்லாந்து அரசு, வரும் 2026 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்க் மதிப்பிலான புதிய அரசுப் பத்திரங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, 2026ல் காலாவதியாகும் பத்திரங்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, மொத்த “நிலுவைப் பத்திரங்கள்” (Confederation bonds outstanding) ஒரு பில்லியன் ஃப்ராங்க் அளவுக்கு அதிகரிக்க உள்ளது. இதன் மூலம், அரசின் கடன் மேலாண்மைக்கான திட்டமிடல் மேலும் வலுப்பெறும் என நிதி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

சுவிட்சர்லாந்து, உலகளாவிய பொருளாதார அசாதாரண நிலை, வட்டி விகித மாற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தைகளின் அதிர்வுகளை கவனத்தில் கொண்டு, பத்திர வெளியீட்டை மிகத் திட்டமிட்ட முறையில் மேற்கொள்கிறது. இந்த முடிவு, முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் நடவடிக்கையாக மதிக்கப்படுகிறது.

உலகின் பெரிய நிதி மையங்களில் ஒன்றாக திகழும் சுவிட்சர்லாந்தின் அரசுப் பத்திரங்கள், குறைந்த ஆபத்து மற்றும் நிலையான வருமானத்தைத் தேடும் சர்வதேச முதலீட்டாளர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பைப் பெறுகின்றன.

தற்போதைய  மதிப்பீட்டின் படி, 2026ல் வெளியிடப்பட உள்ள பத்திரங்களின் சர்வதேச மதிப்பு சுமார் 5.7 பில்லியன் டொலராகும். இந்த அறிவிப்பு, சுவிட்சர்லாந்தின் அடுத்தாண்டு நிதி திட்டங்கள், கடன் மேலாண்மை மற்றும் சந்தை நிலைத்தன்மைக்கான முக்கியமான விடயமாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

Related Articles

Back to top button