Swiss News In Tamil

ஆப்பிள் நிறுவன இணை நிறுவனர் Steve Jobs’s சுவிஸ் பூர்வீகம் கொண்டவர் : ஆய்வில் உறுதி

ஆப்பிள் நிறுவன இணை நிறுவனர் Steve Jobs’s சுவிஸ் பூர்வீகம் கொண்டவர் : ஆய்வில் உறுதி

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர், நவீன தொழில்நுட்ப உலகை புரட்டிப் போட்ட ஸ்டீவ் ஜாப்ஸுக்கு சுவிட்சர்லாந்தில் பூர்வீகம் இருந்தது என புதிய ஆய்வு ஒன்று உறுதி செய்துள்ளது. இதுவரை வதந்தியாகவே இருந்த இந்த தகவல், விரிவான வம்சவரலாறு ஆய்வின் மூலம் இப்போது தெளிவான உண்மையாகியுள்ளது.

ஆர்காவ் கண்டோனின் நொயன்ஹோஃப் (Neuenhof) என்னும் சிற்றூரில் வசித்த ஷிப்ளி (Schibli) குடும்பத்தில்தான் ஸ்டீவ் ஜாப்ஸுன் முன்னோர்கள் இருந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 1800களின் நடுப்பகுதியில், உள்ளூர் நிர்வாகத்தின் நிதியுதவியுடன் இந்தக் குடும்பம் அமெரிக்கா நோக்கி குடிபெயர்ந்தது. அமெரிக்கா சென்ற பின் காலப்போக்கில் குடும்பப் பெயர் Schibli என இருந்து Jobs என மாறியது.

பல தலைமுறைகள் கழித்து, அதே குடும்பத்தின் ஒரு சந்ததி உலகின் டிஜிட்டல் புரட்சியை வழிநடத்தும் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கப் போகிறார் என்பதில் வரலாற்றின் வினோதம் தெரிகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸுக்கு சுவிஸ் பூர்வீகம் இருந்ததாக பல ஆண்டுகளாக தெரிவித்து வந்தாலும், தெளிவான ஆதாரங்கள் இல்லை. ஆனால் இப்போது நடைபெற்ற முழுத்தகவல் ஆய்வு இதை உறுதிப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஒரு சாதாரண வேளாண்மை கிராமத்திலிருந்து சிலிக்கான் வேல்லி வரை சென்ற இந்த குடும்பப் பயணம், உலகையே மாற்றிய ஒன்று என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

©WRS

Related Articles

Back to top button