Swiss News In Tamil

சுவிஸ் அரசாங்கம் மீது நம்பிக்கையில்லை – சுவிஸ் மக்கள் ஆதங்கம்.!!

சுவிஸ் அரசாங்கம் மீது மக்களின் நம்பிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏழு பேரைக் கொண்ட அமைச்சரவை மற்றும் சமஷ்டி பேரவை தொடர்பில் சுமார் 50 வீதமான மக்கள் மட்டுமே திருப்தி கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்த அரசாங்கத்தை போன்றே தனிப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மீதான மக்களின் நன்மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

பிரபல ஊடகமொன்றினால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

Swiss Tamil News

சுழற்சி முறை ஜனாதிபதி பதவியையும், வெளிவிவகார அமைச்சுப் பதவியையும் வகிக்கும் இக்னேஸியோ காஸீஸிற்கு மக்கள் மத்தியில் மிகவும் குறைந்த ஆதரவு காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் எலொய்ன் பீரெஸ்ட் மீது மக்கள் ஓரளவு நம்பிக்கை கொண்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் மீதான மக்களின் நம்பிக்கையும் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button