Swiss News In Tamil

சுவிஸில் உணவுப் பழக்க வழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் : மருத்துவர்கள் கவலை

சுவிஸில் உணவுப் பழக்க வழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சுவிட்சர்லாந்தில் உணவுப் பழக்க வழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மருத்துவர்களும் அதிகாரிகளும் கவலை வெளியிட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் விரைவுணவு (ஃபாஸ்ட்-புட்) உணவகங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்தப் போக்கு விரைவில் மாறும் நிலையில் தெரியவில்லை எனவும் இதனால் மக்களின் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடல்நலம் குறித்து அதிகாரிகளும் மருத்துவர்களும் கடுமையாக கவலை தெரிவித்துள்ளனர்.

15% குழந்தைகள் மற்றும் 43% பெரியவர்கள் அதிக எடை அல்லது பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் (Federal Food Safety and Veterinary Office – FSVO). இதனுடன் இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் அபாயங்களும் அதிகரிக்கின்றன.

மருத்துவர்களின் எச்சரிக்கை:

அமெரிக்காவில் அதிக ஃபாஸ்ட்-புட் கடைகள் இருப்பதுடன், பருமன் விகிதமும் மிக அதிகம். உணவுச் சூழல் மிகப் பெரிய பங்காற்றுகிறது என ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையின் அதிக எடை சிகிச்சை பிரிவின் தலைவர் ஜார்ஜ் கொரெயா குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களை குறிவைத்து விளம்பரங்கள் நடத்தப்படுகின்றன – குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் போன்ற வழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பிரான்ஸ் போன்ற நாடுகள் இதுபோன்ற விளம்பரங்களை கட்டுப்படுத்த சட்டங்களை வகுத்துள்ளன. சுவிட்சர்லாந்தில் தற்போது “தன்னார்வ அடிப்படையிலான கட்டுப்பாடு” மட்டுமே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

 

Related Articles

Back to top button