Swiss News In Tamil

Coop City ஆன்லைனில் 260 பொருட்கள் திடீரென இலவசம் .!!

Coop City ஆன்லைனில் 260 பொருட்கள் திடீரென இலவசம் .!! சுவிஸ் பிரபல சூப்பர் மார்க்கெட்டான கோப் சிட்டி தற்செயலாக சுமார் 260 தயாரிப்புகளை அதன் இணையதளத்தில் இலவசமாக வழங்கிவிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம், புதுவருட தினமாக யனவரி முதலாம் திகதி இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்பகோளாறு காரணமாகவே ஆன்லைனில் இவ்வாறான தவறு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Coop City ஆன்லைன் கடையில் 260 பொருட்கள் திடீரென இலவசம்

வாடிக்கையாளர்கள் தற்செயலாக கோப் சிட்டி ஆன்லைனை பார்த்தபோது பல விலையுயர்ந்த பொருட்கள் இலவசமாக விற்பனைக்கு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

கோப் நிறுவனம் தொழில்நுட்ப பிரச்சினையை அடையாளம் கண்டு சரிசெய்ய சுமார் இரண்டரை மணி நேரம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

(c) google

அந்த இடைவெளியில் பல வாடிக்கையாளர்கள் ‘இலவச’ கொள்முதல் செய்துள்ளதாகவும் அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”2″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

எனினும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் அப்பொருட்களை வாங்கலாம் என குறிப்பிட்டுள்ளதோடு இலவச ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்டமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button