Swiss News In Tamil

சூரிச்சில் காப்பி மெஷின்களில் பாக்டீரியா!: சுவிஸ் ஆய்வகம் கண்டுபிடிப்பு

சூரிச்சில் காப்பி மெஷின்களில் பால் பானங்களில் பாக்டீரியா – சுகாதாரத்தில் கவனம் தேவை!

கடந்த ஆண்டில் சூரிச் கன்டோனல் ஆய்வகத்தால் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒவ்வொரு நான்காவது காப்பி மெஷின் பால் பான மாதிரியிலும் சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. குறிப்பாக, சில மாதிரிகளில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் (intestinal bacteria) இருந்தது.

இது தொடர்பாக சூரிச் மாநிலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உணவகங்கள், மற்றும் பெட்ரோல் நிலையங்களில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி பயன்படுத்தும் Fully automatic coffee machines துல்லியமாக பராமரிக்கப்படாவிட்டால், மிகவும் அசுத்தமானதாக மாறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டில், சூரிச் மாநில ஆய்வகத்தில் 15 காப்பி மெஷின் மாதிரிகள் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 4 மாதிரிகளில் Enterobacteria எனப்படும் பாக்டீரியா வகை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை மீறியதாக கண்டுபிடிக்கப்பட்டது. இவை மனிதர் மற்றும் விலங்குகளின் குடல் பகுதிகளில் காணப்படும் பாக்டீரியாக்கள் ஆகும். சில வகைகள் வயிற்றுப் பிணி (diarrhoea) போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

மேலும் ஒரு மாதிரியில், Aerobic mesophilic bacteria எனப்படும் மற்றொரு வகை பாக்டீரியாவும் அளவை மீறியது. இது பல வகையான கிருமிகளை உள்ளடக்கியது.

இந்த குறைகளைத் தொடர்ந்து, மேஷின் உரிமையாளர்களிடம் காரணங்களை விசாரித்து, உடனடி சுத்தம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். பின்னர் மேற்கொண்ட சீராய்வுகளின் போது மீண்டும் இந்த வழிகாட்டி மதிப்புகள் மீறப்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.

இதன் மூலம் தரமான சுகாதார பராமரிப்பு இல்லாத காப்பி மெஷின்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளதாக சூரிச் மாநிலம் தெரிவித்துள்ளது.

@SwissInfo

Related Articles

Back to top button