Swiss News In Tamil

சுவிஸிற்குள் 600 கிலோ தங்கம் கடத்த முயற்சித்த நபர்கள் கைது

இசுவிஸிற்குள் 600 கிலோ தங்கம் கடத்த முயற்சித்த நபர்கள் கைது

<த்தாலிய அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை, 600 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியை சுவிட்சர்லாந்துக்கு சட்டவிரோதமாக கடத்திய ஓர் பெரிய கடத்தல் கும்பலை சிக்கவைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த வழக்கு 26 மில்லியன் யூரோவிற்கு மேற்பட்ட பாரிய பணமோசடியின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகுின்றது. முக்கிய பிரதிவாதி எமிலியா-ரோமான்யாவின் பெராரா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவரும் அவரது சகாக்களும் தங்கம் மற்றும் வெள்ளியை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்தது மற்றும் பணநீக்கம் செய்தது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

560 கிலோ தங்கம் மற்றும் 65 கிலோ வெள்ளி சுவிட்சர்லாந்துக்குள் கடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை பெரும்பாலும் இத்தாலியில் இருந்து சட்டவிரோதமாக பெற்றவை என நம்பப்படுகிறது.

220,000 யூரோ மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரதான சந்தேக நபரின் வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 100,000 யூரோ பணம் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் ஒரு காரில் மறைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் 17 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

@tamilnews

Related Articles

Back to top button