Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களில் அதிகரிக்கும் தீ விபத்துகள்

சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களில் அதிகரிக்கும் தீ விபத்துகள்

சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களில், குறிப்பாக வாலைஸ் (Valais), டிசினோ (Ticino), மற்றும் கிரவுபூண்டன் (Graubünden) போன்ற பகுதிகளில், அண்மையில் காட்டுத்தீ மற்றும் வாகனத் தீ விபத்துகள் அதிகரித்து வருகின்றன. 2023 ஜூலை மாதம் வலைஸ் மாகாணத்தில் உள்ள பிட்ஷ் (Bitsch) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, 100 ஹெக்டேர் பரப்பளவு காடுகளை அழித்தது.

இதேபோல், 2022 ஆம் ஆண்டு டிசினோவில் மூன்று காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகின. மேலும், ஜூரா (Jura), வெளட் (Vaud), மற்றும் ப்ரிபூர்க் (Fribourg) மாகாணங்களில் வாகனங்கள் மற்றும் பண்ணைகளில் ஏற்பட்ட தீ விபத்துகளால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த தீவிபத்துகளில் 90% மனிதர்களின் கவனக்குறைவு அல்லது தீய வைப்பு (arson) காரணமாக ஏற்படுகின்றன. வறட்சி, குறைந்த மழைப்பொழிவு மற்றும் வலுவான காற்று ஆகியவை தீவிபத்து ஆபத்தை மேலும் அதிகரிக்கின்றன. 2025 ஜூன் மாதத்தில், ஜெனீவா, துர்காவ் (Thurgau), மற்றும் ஷாஃப்ஹவுசன் (Schaffhausen) உள்ளிட்ட மாகாணங்களில் தீவிபத்து ஆபத்து “கணிசமான” மற்றும் “உயர்” அளவுகளாக பதிவாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் அண்மையை நாட்களாக அதிகரித்து வரும் வெப்பமான காலநிலை காரணமாக இவ்வாறான தீ விபத்து சம்பவங்களில் இருந்த பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

முக்கியமாக…

  • காடு மற்றும் காட்டிற்கு அருகிலுள்ள பகுதிகளில் தீ மூட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக, வறண்ட காலநிலையில் மற்றும் வலுவான காற்று வீசும் போது தீயைப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்தவும்.
  •  சிகரெட், லைட்டர் போன்றவற்றை கவனமாக பயன்படுத்தி, அவற்றை திறந்தவெளியில் வீசாமல் இருக்கவும்.
  • குறிப்பிட்ட, பாதுகாப்பான தீ மூட்டும் இடங்களில் மட்டும் தீ மூட்டவும். எப்போதும் தீயை முழுமையாக அணைத்து விடவும்.
  • தீவிபத்தை கண்டால் உடனடியாக  தீயணைப்பு படை எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கவும். பீதி அடையாமல், உள்ளூர் தீயணைப்பு மற்றும் வனத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.

காட்டுத்தீ மற்றும் வாகனத் தீ விபத்துகளைத் தடுக்க, ஒவ்வொருவரின் கவனமும், பொறுப்புணர்வும் மிகவும் அவசியம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

@SwissTamil24

Related Articles

Back to top button