Swiss News In Tamil

உக்ரைன் ஏதிலிகளுக்கு கூடுதல் தொழில் வாய்ப்பு வழங்க சுவிஸ் அரசு திட்டம்

உக்ரைன் ஏதிலிகளுக்கு கூடுதல் தொழில் வாய்ப்பு வழங்க சுவிஸ் அரசு திட்டம்

உக்ரைன் ஏதிலிகளுக்கு கூடுதல் எண்ணிக்கையிலான தொழில் வாய்ப்புக்களை வழங்க சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உக்ரைன் ஏதிலிகளுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில், அவர்கள் வேலைவாய்ப்பு காரணமாக சுவிஸில் வேறு கான்டன்களுக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஏதிலிகளுக்கு

நிர்வாகத் தடைகளை குறைக்க, தற்போதைய வேலை அனுமதி முறையை எளிதான பதிவு முறையாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. வேலை இல்லாதவர்கள், பொது வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களை செயல்படுத்த, வெளிநாட்டு குடியுரிமை மற்றும் ஒருங்கிணைப்பு சட்டம், அகதி சட்டம் மற்றும் மற்ற இரண்டு சட்டங்களில் திருத்தங்களை அரசு பரிசீலிக்க ஆரம்பித்துள்ளது.

Related Articles

Back to top button