Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் வெங்காயம் தட்டுப்பாடு : விலைகள் உயர்வடையுமா?

சுவிட்சர்லாந்தில் வெங்காயம் தட்டுப்பாடு : விலைகள் உயர்வடையுமா?

சுவிட்சர்லாந்தில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், கடந்த ஆண்டு மோசமான விளைச்சல், தொடர்ந்து மழை மற்றும் ஈரமான மண்ணால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பூஞ்சை காளான் போன்ற நோய்கள் தாவரங்களை பாதித்தன, மேலும் சேமிக்கப்பட்ட பல உற்பத்திகள் களஞ்சியங்களில் அழுகிப்போயின.

வெங்காயம் தட்டுப்பாடு

குறிப்பாக சிவப்பு வெங்காயம் கிட்டத்தட்ட கையிருப்பு இல்லை என தெரியவருகிறது.. Migros, Lidl மற்றும் Aldi ஆகியவை ஏற்கனவே ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. ஏப்ரல் முதல் வெளிநாட்டுப் பொருட்களைச் சார்ந்து இருக்கும் என்றும் coop எதிர்பார்க்கிறது.

இந்த தட்டுப்பாட்டின் காரணமாக வெங்காய விலைகள் உயர்வடையுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், சுவிட்சர்லாந்து இந்த ஆண்டு வழக்கத்தை விட மிகவும் முன்னதாகவே இறக்குமதியை நாட வேண்டியிருக்கும் என்பது உறுதியாகிறது.

Related Articles

Back to top button