Swiss News In Tamil

சுவிஸ் நகரமொன்றில் வீடு வாங்க போட்டி போடும் வெளிநாட்டவர்கள்

சுவிஸ் நகரமொன்றில் வீடு வாங்க போட்டி போடும் வெளிநாட்டவர்கள்

சூரிச் மாகாணத்திலுள்ள Küsnacht மற்றும் Zollikon சுவிட்சர்லாந்திலேயே வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் இடங்கள் என அழைக்கப்பட்டன. தற்போது, வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் இடம் என்னும் பெருமையை அந்த இடங்கள் இழந்துள்ளன.

அவை முன்பு தங்கக் கரை (Gold Coast) என்றே அழைக்கப்பட்ட நிலையில், தற்போது Kilchberg மற்றும் Thalwil என்னும் இடங்கள் அதிக விலைமதிப்புள்ளவையாகிவிட்டன.

சுவிஸ் நகரமொன்றில்

அதற்கு முக்கியக் காரணம், வெளிநாட்டவர்கள், குறிப்பாக ஜேர்மானியர்கள் அங்கு வீடுகள் வாங்க போட்டிபோடுவதுதான். தற்போது Kilchberg மற்றும் Thalwil என்னும் இடங்களில் நிலத்தின் விலை, சதுர மீற்றர் ஒன்றிற்கு சுமார் 35,000 சுவிஸ் ஃப்ராங்குகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட இப்பகுதியில் வெளிநாட்டவர்கள் வீடுகளை வாங்க அதிக போட்டி போடுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button