Swiss News In Tamil

சுவிஸில் வெளிநாட்டவர்களுக்கு அரச பதவிகள் வழங்கவேண்டாம் என கோரிக்கை

சுவிஸில் வெளிநாட்டவர்களுக்கு அரச பதவிகள் வழங்கவேண்டாம் என கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் முக்கிய அரச பதவிகள் உள்நாட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஜெனிவா கட்சி கோரி உள்ளது.  அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படுவோர் வெளிநாட்டு பிரஜைகளாக இருக்கக் கூடாது என ஜெனிவா மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக அண்டை நாடுகளில் இருந்து சுவிடச்ர்லாந்திற்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள வருவோருக்கு அரசாங்கத்தின் முக்கிய பதவிகள், பொது நிர்வாக துறை உள்ளிட்டவற்றில் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து பிரஜைகள் அல்லது நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு உள்நாட்டு முக்கிய அரச பதவிகள் வழங்கப்படக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை இல்லாத குறித்த கன்டோன்களில் எந்தவிதமான பூர்வீகமும் இல்லாதவர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படுவதாகவும் இது ஏற்புடையது அல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்காக மக்கள் இயக்கம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button