Swiss News In Tamil

ஏதிலி கோரிக்கையாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் என எதிர்பார்ப்பு

ஏதிலி கோரிக்கையாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் என எதிர்பார்ப்பு

சுவிட்சர்லாந்தில் ஏதிலி கோரிக்கையாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து குடியேறிகளுக்கான அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில் சுமார் 24000 பேர் ஏதிலி கோரிக்கைக்காக விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையானது கடந்த 2024ம் ஆண்டை விடவும் 4000 குறைவானது என தெரிவிக்கப்படுகின்றது.

நிலுவையில் உள்ள ஏதிலிக் கோரிக்கை விண்ணப்பங்களும் குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விடவும் ஆண்டில் ஏதிலி கோரிக்கையாளர் எண்ணிக்கை 15 வீதமளவில் குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஏதிலி கோரிக்கையாளர்

Related Articles

Back to top button