பேர்ன்னில் குழந்தையை கடித்து குதறிய நாய் கருணைக்கொலை.!!
பேர்ன்னில் குழந்தையை கடித்து குதறிய நாய் கருணைக்கொலை.!! வெள்ளிக்கிழமை பிற்பகல் பெர்ன் மாகாணத்தில் உள்ள சுமிஸ்வால்டில் ஒரு சோகமான சம்பவம் நடந்தது. ஒரு சிறு குழந்தை ராட்வீலர் எனப்படும் நாய் இனத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தது.
கட்டிடம் ஒன்றின் முன் உள்ள மைதானத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் தலையிட்டு குழந்தையிடம் இருந்து நாயை பிரித்து பிடித்தனர். பலத்த காயமடைந்த குழந்தைக்கு ரேகா (Air rescue) குழு மூலம் தளத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவத்தின் சரியான தன்மை தற்போது விசாரணையில் உள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை கருத்தில் கொண்டு சூழ்நிலைகள் அல்லது குழந்தையின் வயது குறித்த கூடுதல் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
சம்பவத்தையடுத்து கால்நடைத்துறையினர் நாயை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ராட்வீலர் கருணைக்கொலை பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





