Swiss News In Tamil

சுவிஸ் மக்கள் எதைக்குறித்து அதிகம் பயப்படுகிறார்கள்? ஆய்வில் தகவல்

சுவிஸ் மக்கள் எதைக்குறித்து அதிகம் பயப்படுகிறார்கள் என்பதைக் கண்டறிவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆய்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. அந்த ஆய்வில், விலைவாசி உயர்வு குறித்து, குறிப்பாக, காப்பீட்டு பிரீமியம்கள் குறித்தே சுவிஸ் மக்கள் அதிகம் பயப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, வீடுகள் குறித்தும், ஓய்வு பெறுதல் குறித்தும் சுவிஸ் மக்கள் அதிகம் கவலைப்படுகிறார்களாம்.என்றாலும், சுவிஸ் அரசு அறிமுகம் செய்துள்ள ஆண்டு இறுதி போனஸ் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மக்களுக்கு அச்சம் குறைந்துள்ளதாகவும் குறித்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button