Basel-Mulhouse விமானநிலையத்தில் மீண்டும் பரபரப்பு
Euroairport Basel-Mulhouse விமானநிலையத்தில் நேற்று புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானநிலையத்தில் உள்ள பயணிகள் அனைவரும் நேற்று மாலை மீண்டும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டார்கள்.
முந்தைய நிகழ்வுகளைப் போலவே, ஆபரேட்டர்கள் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளனர். இந்த ஆண்டு குறித்த விமானநிலையத்தில் இடம்பெற்ற ஐந்தாவது வெளியேற்றம் இதுவாகும்.
நேற்று இரவு 7 மணிக்குப்பின்னர் விமானநிலையம் மூடப்பட்டது என்று விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கீஸ்டோன் எஸ் டிஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். இதன் பின்னணி குறித்து எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.

பின்னர் நூற்றுக்கணக்கான பயணிகள் வெளியே ஓடுவதை ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் காணமுடிந்தது. இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் இன்று காலை 10 மணியளவில் விமானநிலையம் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கப்படும் என விமான நிலையம் அறிவித்துள்ளது. பயணிகள் தாமதத்தை சந்திக்க நேரிட்டுள்ளதோடு பல விமானங்கள் மாலை தாமதமாக புறப்பட்டன.
பாசல் முல்ஹவுஸ் விமான நிலையத்தில் மீண்டும் குண்டு அச்சுறுத்தல்
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து விமான நிலையம் ஐந்தாவது முறையாக இவ்வாறு மக்களை வெளியேற்றியுள்ளர். பிரெஞ்சு அதிகாரிகளின் கூற்றுப்படி, மார்ச் மற்றும் ஜனவரியில் நடந்த சம்பவங்கள் பொய்யான வெடிகுண்டு மிரட்டல்களை அடிப்படையாகக் கொண்டவை. இதுவரை நடந்த விசாரணை குறித்தும்இ மூளையாக செயல்பட்டவர்கள் குறித்தும் இதுவரை எதுவும் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.





