Swiss News In Tamil
பேர்ன் கன்டோனில் சோகம் – எரு குழியில் விழுந்து இருவர் பலி!!
பேர்ன் கன்டோன், ட்ருப்சாச்சனில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த சோகமான விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பண்ணையில் உள்ள உரம் குழியில் விழுந்தே குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளனர். குழியிலிருந்து மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்திருந்தார்.

குறித்த நபர் 49 வயதுடைய சுவிஸ் பிரஜை என தெரியவந்துள்ளது. மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை காலை இரண்டாவது நபரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் பேர்ன் மாகாணத்தைச் சேர்ந்த 78 வயதான சுவிஸ் நபர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
எரு குழியில் வேலை செய்யும் போது விபத்து ஏற்பட்டதாக பேர்ன் கன்டோனல் போலீசார் தெரிவிக்கின்றனர்.
Credits (c) Emmental-Oberaargau





