Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் புதிய ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

சுவிட்சர்லாந்தின் புதிய ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி – ஜனவரி 1 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் அதிபராக கரின் கெல்லர்-சுட்டர் பதவியேற்றார். 61 வயதாகும் அவர் 2023 முதல் நாட்டின் நிதிப் பொறுப்பில் இருந்து வருகிறார். அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலத்திலும் இந்தப் பணியைத் தொடர்வார்.

இதற்கு முன், அவர் ஃபெடரல் கவுன்சிலில் சேர்ந்தபோது, ​​​​2019 முதல் நீதி மற்றும் காவல் துறையை வழிநடத்தினார். கரின் கெல்லர்-சுட்டர் சென்ட் கேலனைச் சேர்ந்தவர் மற்றும் லிபரல்-ரேடிகல் கட்சியின் (பிஎல்ஆர்) ஒரு அங்கத்துவராக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தின் புதிய ஜனாதிபதி

இந்நிலையில் புதிதாக பதிவியேற்ற ஜனாதிபதி நேற்றைய தினம் தனது நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

“பணிவு மற்றும் விட்டுக் கொடுக்கும் பண்பு மிகவும் முக்கியமானது எனவும் சகவாழ்வுடன் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனவும் அவர் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button